பஸ்ஸில் பெண்ணிடம் ரூ. 2 லட்சம் திருட்டு

X
குமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் மனைவி சௌமியா (29). இவருக்கு தக்கலையில் உள்ள பிரபல தனியார் வங்கியில் கணக்கு உள்ளது. இந்த நிலையில் இன்று காலை தக்கலை வந்த சௌமியா தனது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 2 லட்சம் பணத்தை எடுத்துள்ளார். அதை தொடர்ந்து வீட்டுக்கு திரும்ப களியக்காவிளை செல்லும் அரசு பஸ்ஸில முளகுமூடு செல்ல டிக்கெட் எடுத்து பயணித்துள்ளார். பஸ்ஸில் பயணம் செய்யும் போது திடீரென அவரது கைப்பையை பார்த்துள்ளார். அப்போது பை திறந்த நிலையில் காணப்பட்டது. பையை பரிசோதித்த போது, உள்ளே இருந்த ரூபாய் 2 லட்சத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சௌமியா அருகில் இருந்த சக பணியாளர்களிடம் விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து மனங்கலங்கிய சௌமியா தக்கலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story

