ஊத்தங்கரை: பரிகாரம் செய்வதாக பெண்ணிடம் பணம் பறித்த 2 பேருக்கு காப்பு.

X
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரையை அடுத்துள்ள மிட்டப்பள்ளி தளபதி நகர் பகுதியை சோ்ந்த மோகன் இவருடைய மனைவி சரிதாவின் வீட்டிற்கு மார்ச் 29-ம் தேதி தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள ஈச்சம்பாடி செங்குட்டை பகுதியை சோ்ந்த சரண் (25) ஜீவா (36) ஆகிய 2 பேர் ஜாதக பலன்கள் சரியில்லாமல் உள்ளாதல் பரிகாரம் செய்து கொள்ளுமாறு சரிதாவிடம் கூறியுள்ளனர். இதற்கு சரிதா ஒப்புக் கொண்டார். இதையடுத்து சரிதாவிடமிருந்து 5000 ரூபாய் பணம் அரை பவுன் தோடு, வெள்ளி கொலுசு ஆகியவற்றை கோயிலில் வைத்து பூஜை செய்தது தருவதாகக் கூறி வாங்கிச் சென்றவா்கள் மீண்டும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த சரிதா இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீச்ல் புகார் கொடுத்தார். அதன் போரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சரண், ஜீவா ஆகிய இரண்டு பேரை நேற்று முன் தினம் கைது செய்தனர்.
Next Story

