காங்கேயம் அருகே மது விற்ற 2 பேர் கைது

X
காங்கேயம் சுற்று வட்டார பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் நத்தக்காட்டுவலசு நொய்யல் பாலம் அருகில் மது விற்பனை செய்த பரஞ்சேர்வழி பொடாரம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது 60), எக்கட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் ( 55) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 55 மது பாட்டில்களை பறி முதல் செய்தனர்.
Next Story

