கோபி அருகே கார் மோதி தொழிலாளி பலி 2 பேர் காயம்

X

கோபி அருகே கார் மோதி தொழிலாளி பலி 2 பேர் காயம்
கோபி அருகே கார் மோதி தொழிலாளி பலி 2 பேர் காயம் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத்தை சேர்ந்தவர் - கணேசன் (வயது 50). கூலித்தொழிலாளி.இவர் நேற்று கோபி-சத்தி மெயின் ரோட்டில் உள்ள போடிசின்னம்பாளையம் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக புஞ்சைபுளியம்பட்டியைச் சேர்ந்த அன்பு (48) என்பவர் ஓட்டி வந்த கார் கணேசனின் சைக்கிள் மீது எதிர் பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கணேசன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அன்பு, உடன் வந்த மோகன் (60) ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். இது குறித்த தகவல் கிடைத்ததும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த அன்பு, மோகன் ஆகியோர் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story