ராசிபுரம் அருகே கோவிலில் புதையல் இருப்பதாக நினைத்து கோவில் மண்டபத்தில் குழி தோண்டிய 2 பேர் கைது. ஒருவர் தலைமறைவு...

X
Rasipuram King 24x7 |15 April 2025 7:02 PM ISTராசிபுரம் அருகே கோவிலில் புதையல் இருப்பதாக நினைத்து கோவில் மண்டபத்தில் குழி தோண்டிய 2 பேர் கைது. ஒருவர் தலைமறைவு...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சீராப்பள்ளி பகுதியில் அருள்மிகு செவ்விந்தீஸ்வரர் திருக்கோவிலானது அமைந்துள்ளது. இந்த நிலையில் கோவிலில் உள்ள அர்த்தமண்டபத்தில் குழி தோண்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த செயல் அலுவலர் செந்தில் ராஜா நாமகிரிப்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது கோவில் வளாகத்தில் கடந்த (08-04-25 )அன்று இரவு 10 மணி அளவில் கோவில் பூசாரி கணேஷ்(27) மற்றும் அவரது நண்பர்கள் ஆன மணிகண்டன்(30), சரவணன்(59) ஆகிய மூவரும் கோவிலில் உள்ளே சுரங்கப்பாதை மற்றும் புதையல் இருப்பதாக நினைத்து குழி தோண்டி நிலையில் அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்த மூவரும் கோவிலில் இருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் நாமகிரிப்பேட்டை காவல் துறையினர் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து இதில் கணேஷ், மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள சரவணன் என்பவரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்...
Next Story
