இரட்டைக் கொலையில் 2 பேரை போலீசார் மடக்கினார்

X
ஈரோடு மாவட்டம் தாளவாடி தொட்டகாஜனூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதப்பா இவரது மனைவி தொட்டம்மா இருவரும் தொழிலாளிகள் இவரது மகன் ராகவன்( 11) மகள் அமிர்தா( 9)ராகவன் சூசைபுரம் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருகிறார்.ஞாயிறு அன்று இரவு ராகவன் அவரது பாட்டி சிக்கம்மா வீட்டில் இரவில் தூங்கி கொண்டிருந்தார்.நேற்று முன்தினம் காலை தனது அண்ணாவை காண தங்கை அமிர்தா சென்றுள்ளார்.வீட்டில் உள்ளே பாத்த போது ராகவன் மற்றும்பாட்டி சிக்கம்மா இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.மலைப்பகுதியில் 2 பேர் கொலை செய்த சம்பவ இடத்துக்கு டி.ஜ.ஜி சசிமோகன், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.மோப்ப நாய் காவேரி மற்றும் கை ரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். பின்னர் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். கொலையாளியை பிடிக்க 4 தனிப்படைக்க அமைக்கப்பட்டது.பின்னர் நேற்று முன் தினமும் இரவு முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் தொட்டாகாஜனூர், முழுவதும் ஆய்வு செய்தனர். பின்னர் அண்ணநகர் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.நள்ளிரவு நேரத்தில் அண்ணாநகர் பெட்ரோல் பங்கில் இருந்து நபர் ஒருவர் நடந்து சென்றது தெரிய வந்தது. அவரது அடையாளங்களை சேகரித்த போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாக்கின. சொத்துக்காக இந்த கொலை நடந்தது தெரியவந்தது. தொடர்பாக கொலை உண்ட சிக்கம்மா பெண் உறவினர் ஒருவர், அவரது ஆண் நண்பர் இருவரும் சுற்றியுள்ளனர். இருவரிடமும் போலீசார் விசாரணையை திவரப்படுத்தியுள்ளனர். விசாரணை முடிவில் எதற்காக இந்த கொலை நடந்தது என பெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
Next Story

