ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழை..

ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2  மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழை..
X
ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழை..
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழை... பகல் நேரத்தில் வெப்பம் வாட்டி வந்த நிலையில் இரவு நேரத்தில் குளுமையான சூழ்நிலை.... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரத்தில் பெய்த கனமழையால் வெப்பம் நீங்கி குளுமையான சூழ்நிலை நிலவுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. கடந்த 10 நாட்களாக மிகக் கடுமையான வெப்பம் வாட்டி வந்த நிலையில் பொதுமக்கள் வெளியில் செல்லவே அச்சப்பட்டு வீட்டிற்குள்ளேயே முடங்கி வந்தனர். இந்நிலையில் இன்றும் காலை முதல் மாலை வரை கடுமையான வெப்பம் மற்றும் புழுக்கமான சூழ்நிலை நிலவி வந்த நிலையில் இரவு நேரத்தில் திடீரென பெய்த 2 மணி நேர கனமழையால் வெப்பம் மற்றும் புழுங்கல் நீங்கி குளுமையான சூழ்நிலை நிலவியது. ஒரு மணி நேரம் பெய்த மழையானது கனமழையாக கொட்டி தீர்த்ததால் நகர் பகுதி மற்றும் கிராம பகுதிகளில் மின்தடை விநியோகம் பாதிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான மம்சாபுரம், வன்னியம்பட்டி, கிருஷ்ணன் கோவில்,வத்திராயிருப்பு கூமாபட்டி பகுதியில் பெய்த மழையின் காரணமாக கடுமையான வெப்பம் நீங்கி இரவு நேரத்தில் குளுமையான சூழ்நிலை நிலவியது.
Next Story