சேலத்தில் மூதாட்டியிடம் தாலி சங்கிலியை பறித்த 2 பேர் கைது

X
சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மின்னாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மனைவி ருக்மணி (வயது 70). இவர் கடந்த 30-ந் தேதி இரவு 9.30 மணிக்கு, வீட்டின் கதவை மூட வெளியே வந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர், மூதாட்டி கழுத்தில் இருந்த 5½ பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றார். இதுகுறித்து ருக்மணியின் மகன் மனோகரன் (48) கொடுத்த புகாரின் பேரில், காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரித்தனர். அதில், மின்னாம்பள்ளி பெருமாள் கோவில் கரடு பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் டிரைவர் விக்னேஷ் (25), மின்னாம்பள்ளி செல்லியம்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் கூலித்தொழிலாளி ஏழுமலை (33) ஆகிய 2 பேரும் மூதாட்டியிடம் நகையை பறித்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5½ பவுன் தாலி சங்கிலியை போலீசார் மீட்டனர்.
Next Story

