காவேரிப்பட்டிணம் அருகே மோட்டார், குழாய்கள் சேதம்- பெண் உள்பட 2 பேர் கைது

X
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்துள்ள வரட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி (60) விவசாயி. இதே பகுதியை சேர்ந்தவர் பச் சையப்பன் (52). உறவினர்களான இவர்களுக்குள் நிலத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 15-ஆம் தேதி அன்று ஏற்பட்ட பிரச்சினையில் சின்னத்தம்பி நிலத்திற்கு செல்லும் தண்ணீர் குழாய் மற்றும் விவசாய நிலத்தில் இருந்த மோட்டார் ஆகியவற்றை பச்சையப்பன் தரப்பினர் அடித்து உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சின்னத்தம்பி அளித்த புகாரின் பேரில் காவேரிப் பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் தொடர்பாக பச்சையப்பன், காசியம்மாள் (32) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

