விருதுநகர் ரயில் நிலையத்தில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்*

விருதுநகர் ரயில் நிலையத்தில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்*
X
விருதுநகர் ரயில் நிலையத்தில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்*
விருதுநகர் ரயில் நிலையத்தில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் இன்று அதிகாலை மேற்கு வங்க மாநிலம் புருலியாவிலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் புருலியா எக்ஸ்பிரஸ் ரயிலில் விருதுநகர் ரயில்வே இருப்பு பாதை காவல் நிலைய ரயில்வே போலீஸ் குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் காவலர்கள் அய்யாசாமி, தாவீது மற்றும் பொன்தனசேகரன் சோதனை செய்தபோது பொதுப்பெட்டியில் கேட்பாரற்று பையை கைப்பற்றினர். அதனை சோதனை செய்தபோது அதில் இரண்டு பைகள் இருந்தது. உடனடியாக 2 பைகளையும் பிரித்து பார்த்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்கும் போதை வஸ்தான 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. கைப்பற்றப்பட்ட கஞ்சாவினை ராமநாதபுரம் மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. கஞ்சாவை ரயிலில் கொண்டு வந்தது யார் என விருதுநகர் ரயில்வே இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story