கோவில் ஊழியர்கள் இன்று 2-ம் நாள் போராட்டம்

X
குமரி மாவட்ட திருக்கோயில் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஊழியர்கள் நேற்று காலை சுசீந்திரம் அறநிலையத்துறை அலுவலகத்திற்கு முன்பு குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருக்கோயில் ஊழியர் சங்க தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட கோயில்களுக்குள் அனுமதிக்கப்பட்ட நிரந்தர பணியிடங்களில் தற்போது 352 பேர் நீண்ட காலமாக பணியாற்றி வருகின்றனர் அவர்களுக்கு அரசு ஆணைப்படி ஊதியம் நிர்ணயம் செய்து சம்பளம் கொடுத்திடவும் அதற்கு உண்டான பணத்தை ஒதுக்கீடு செய்த பிறகும் வழங்காமல் இருக்கும் குமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாகத்தை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் யாரும் வராத காரணத்தினால் நேற்று இரவு முழுவதுமே குடும்பத்தோடு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தங்கள் கோரிக்கை ஏற்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என இன்று 2-ம் நாள் தொடர்ந்து போராடி வருகின்றனர். தொடர் போராட்டம் நடந்து விட்டு வருவதால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Next Story

