ஆற்காடு அருகே புகையிலை பொருட்கள் கடத்திய 2 வாலிபர்கள் கைது

ஆற்காடு அருகே புகையிலை பொருட்கள் கடத்திய 2 வாலிபர்கள் கைது
X
புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர்கள் கைது
ஆற்காடு டவுன் போலீசார் நேற்று வேப்பூர் தனியார் கல்லூரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, காரில் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், ராஜஸ்தான் மாநிலம் தேஜ்பூர் பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் கௌசா (வயது 21), மாசி மாவட்டத்தை விஜய் சிங் (30) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 280 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Next Story