தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 2-வது முறையாக விற்பனை
நாகை வெளிப்பாளையம் பச்சைப்பிள்ளை குளத் தெருவில் இயங்கி வரும் ஒரு பெட்டிக்கடையில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வந்த தகவலின் அடிப்படையில், அந்தக் கடையில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு, முதல் தகவல் அறிக்கை, வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர், உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில், நேற்று நாகை மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பிரவின்குமார் உத்தரவின் பேரில், நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஏ.டி.அன்பழகன் நேற்று பெட்டிக்கடையை பூட்டினார். பின்னர், நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் கூறியதாவது பெட்டிக்கடை உரிமையாளர் இரண்டாவது முறையாக, இந்த குற்றத்தை செய்துள்ளதால், அவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன், ஒரு மாதம் கடை பூட்டி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story



