பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் மாநில அளவில் 2ம் இடம் பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு.

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் மாநில அளவில் 2ம் இடம் பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு.
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் மாநில அளவில் 2ம் இடம் பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு. நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு இன்று முடிவுகள் வெளியானது. இதில் கரூரை அடுத்த மண்மங்கலம் பகுதியில் செயல்படும் எஸ் எஸ் வி எம் பள்ளியில் பயின்ற இந்துஜா என்ற மாணவி 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம், மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்தார். இதே பள்ளியில் பயின்ற தர்ஷினி ஸ்ரீ என்ற மாணவி 495 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்தார். இதே போல ஸ்ரீகவி என்ற மாணவி 494 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை பிடித்தார். சாதனை படைத்த மாணவிகளை இன்று எஸ் எஸ் வி எம் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளியின் தாளாளர் சுப்பிரமணியன் பள்ளியின் அலுவலகத்திற்கு அழைத்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கேடயங்கள் பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த இந்துஜாவுக்கு அவரது தந்தை வீரக்குமார் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்துக்களை பெற்றுக் கொண்ட மாணவிகள், பள்ளியின் தாளாளர் சுப்பிரமணியன் மற்றும் பள்ளியின் முதல்வர் தினேஷ் குமார் ஆகியோருக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.
Next Story