கிருஷ்ணகிரி: மின்சாரம் பாய்ந்து 2 மான்கள் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: மின்சாரம் பாய்ந்து 2 மான்கள் உயிரிழப்பு
X
கிருஷ்ணகிரி: மின்சாரம் பாய்ந்து 2 மான்கள் உயிரிழப்பு
வேப்பனப்பள்ளி அருகே உள்ள சின்ன சூலாமலை கிராமத்தில் வசிப்பவா் ராஜா (45). விவசாயியான. இவரது விவசாய நிலத்தில் மான்கள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வந்துள்ளது. இதனால் ராஜா தனது உறவினர் பாலேப்பள்ளியைச் சோ்ந்த முருகன் (47) என்பவருடன் சோ்ந்து நிலத்தில் இரும்புக் கம்பிவலை அமைத்து அதில் மின்சாரம் செலுத்தியுள்ளார். உணவுத் தேடிவந்த மான்கள் மின் கம்பி வலையில் சிக்கி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன. தகவல் அறிந்த வனத் துறையினா் ராஜா, முருகன் ஆகிய 2 பேரை கைது செய்து அவா்களிட;ம இருந்து இறந்த மான்களின் உடல்களை பறிமுதல் செய்தனா்.
Next Story