கோவை: கருமத்தம்பட்டி அருகே மாடுகளைத் திருடிய 2 பேர் கைது !
கருமத்தம்பட்டியை அடுத்த கிட்டம்பாளையத்தில் பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான 3 பசு மாடுகள் சாலையோரத்தில் கட்டப்பட்டிருந்தன. அந்த மாடுகள் திடீரென காணாமல் போனது. இதுகுறித்து புகாரின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஊருக்குள் ஜஸ் விற்க வந்தவர்களான தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த யோவான் (28), முத்து (27) ஆகிய இருவர் 3 பசு மாடுகளைத் திருடியது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் நேற்று கைது செய்து, அவர்கள் திருடிய மாடுகளை மீட்டனர்.
Next Story



