கிருஷ்ணகிரி:இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 புரோக்கர்கள் கைது

X
கிருஷ்ணகிரி ஆசாத் நகர் பகுதியில் குடியிருப்பு ஒன்றிற்கு அடிக்கடி ஆண்கள் வந்து போவதாக அப்பகுதி பொதுமக்கள் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடத்தனர். அதன் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் 2 இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. இதுதொடர்பாக புரோக்கர்களான கோவை தோப்பம்பட்டியை சேர்ந்த வீராசாமி (43) பர்கூர் தாலுகா அங்கிநாயனப்பள்ளி புதூர் சாலை சிற்றரசு (30) ஆகிய இரண்டு பேரைய போலீசார் கைது செய்து இளம்பெண்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
Next Story

