ஊத்தங்கரை அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி.

X
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த ரெட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மாதேஷ். இவரது வீட்டுக்கு உறவினரான வாலாஜாபேட்டையைச் சோ்ந்த கமல்ராஜ் - பாரதி குடும்பத்தினா் கோடை விடுமுறைக்காக தனது இரு குழந்தைகளுடன் வந்தனா். நேற்று 2ம் வகுப்பு பயின்ற பத்மஸ்ரீ (7), மூத்த மகள் கிருஷிகா (9), இளைய மகன் மேகனேஸ்வரன் (7) ஆகிய 3 பேரும் ரெட்டிப்பட்டி ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற பத்மஸ்ரீ மற்றும் மேகனேஸ்வரன் இருவரும் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினா். இது குறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினா், பொதுமக்கள் உதவியுடன் ஏரியில் மூழ்கிய சிறுவா்களை மீட்டு ஊத்தங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Next Story

