காட்டுப்புத்தூரில் பெயிண்டருக்கு கத்திக்குத்து 2 பேர் கைது

X
திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 33). இவர் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காட்டுப்புத்தூரில் இருந்து நாகையநல்லூர் செல்லும் சாலையில் பாலபுரம் மயானம் அருகே மது குடிப்பதற்காக சென்றுள் ளார். அங்கு காட்டுப்புத்தூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த குமரேசன் (30), சரவண மணிகண்டன் (19), தீபக் (26), காடுவெட்டி பகுதியை சேர்ந்த நவீன் என்ற நவலடியான் (21) ஆகியோர் ஏற்கனவே மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மோகன் மற் றும் குமரேசன் தரப்பினர் இடையே வாய் தகராறு ஏற்பட்ட நிலையில், ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதில் ஆத்தி ரமடைந்த தீபக், நவீன், சரவண மணிகண்டன் ஆகியோர் மோகனை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் குமரேசன் மறைத்து வைத்திருந்த சூரி கத்தியால் மோகனை பல இடங்களில் குத்தியுள்ளார்இதில் மோகனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்க ஓடி வந்தனர். இதை பார்த்ததும் குமரேசன் தரப்பினர் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து பலத்த காயம் அடைந்த மோகனை 108 ஆம்பு லன்ஸ் மூலம் காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்லதுரை, காட்டுப்புத்தூர் சப்-இன்ஸ் பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து நவீன், சரவண மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள குமரேசன், தீபக் ஆகியோரை தேடி வருகின்றனர். அவர்கள் மீது பல் வேறு குற்ற வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

