சேலத்தில் 2-வது நாளாக பொக்லைன் எந்திர உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

X
சேலம் மாவட்ட ஜே.சி.பி., பொக்லைன் மற்றும் டோசர் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் வாடகை உயர்வை வலியுறுத்தி 2 நாட்கள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் பொக்லைன் எந்திரம் உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் தொடங்கியது. இதனால் சேலம் கோரிமேடு, கன்னங்குறிச்சி, 5 ரோடு, குரங்குச்சாவடி, பால்பண்ணை, கொல்லப்பட்டி, இரும்பாலை ரோடு ஆகிய இடங்களில் 500-க்கும் மேற்பட்ட ஜே.சி.பி. மற்றும் பொக்லைன் எந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஜே.சி.பி. ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,300-ம், குறைந்தபட்ச வாடகை ரூ.3,500-ம், பொக்லைன் ஒரு மணி நேரத்திற்கு ரூ.2 ஆயிரமும் வாடகை நிர்ணயம் செய்யக்கோரி வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று 2-வது நாளாக ஜே.சி.பி. மற்றும் பொக்லைன் எந்திர உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சேலம் குரங்குச்சாவடி பகுதியில் நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பொக்லைன், ஜே.சி.பி. எந்திர உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அருள் எம்.எல்.ஏ. ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டார்.
Next Story

