ஓசூர் அருகே 2-ஆவது நாளாக சிறுத்தையை தேடும் பணி தீவிரம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ஜூஜவாடியில் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் லூர்து மேரி (65) தனது வீட்டில் நேற்று முன்தினம் துணிது வைத்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் காம்பவுண்ட் சுவர் அருகே சிறுத்தை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஒசூர் வனத்துறையினரும், சிப்காட் காவல் நிலைய போலீசாரும் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டு சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் நேற்று இரண்டாவது நாளாக ஈடுபட்டனர்.
Next Story

