கொண்டலாம்பட்டி அருகே பெண்ணை தாக்கிய 2 பேர் கைது

கொண்டலாம்பட்டி அருகே பெண்ணை தாக்கிய 2 பேர் கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள சிவதாபுரம் மெய்யன் தெரு பகுதியை சேர்ந்தவர் சத்யா (வயது 34). கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரது வீட்டின் அருகே அமர்ந்து கொண்டு அதே ஊரை சேர்ந்த சூர்யா (29), ராகுல் (25) ஆகிய இருவரும் தகாத வார்த்தைகளால் பேசிக் கொண்டிருந்தனர். இதனை சத்யா தட்டிக் கேட்டுள்ளார். அப்போது இவருக்கும், சூர்யா, ராகுல் ஆகியோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறி சத்யாவை இருவரும் தாக்கினர். இதில் காயம் அடைந்த சத்யா சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து சூர்யா, ராகுல் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Next Story