வாலிபரிடம் செல்போன் பறித்த 2 இளைஞர்கள் கைது

X
திண்டுக்கல் கோபால்பட்டி சேர்ந்த பாலமுருகன் இவர் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே குறிஞ்சி லாட்ஜ் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நத்தத்தை சேர்ந்த முருகன் மகன் சூர்யா(19), கோபால்பட்டியை சேர்ந்த செல்வம் மகன் அபினேஷ்(19) ஆகிய இருவரும் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றதாக பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

