காவல்துறையினருக்கு 2-ம் கட்ட புத்தாக்க பயிற்சி

X

திண்டுக்கல்லில் காவல்துறையினருக்கு 2-ம் கட்ட புத்தாக்க பயிற்சி
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் S.P.பிரதீப் உத்தரவின் பேரில், ADSP.மகேஷ் தலைமையில் DCRP.DSP. முத்துகுமார் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுக்கு 2-ம் கட்ட புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியின் போது குற்றம் மற்றும் குற்றவாளிகளை குற்றவாளிகளை கண்காணிக்கும் வலை பின்னல் முறை (CCTNS)-ன் செயலி மேம்படுத்தப்பட்டுள்ளதால் அது குறித்து காவல்துறையினருக்கு விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் CCTNS சார்பு ஆய்வாளர் தேசிய தண்டபாணி, கணினி பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.
Next Story