அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 2 பசுக்கள் பலி

X
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று, மாலை 6:00 மணிக்கு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது, அப்பகுதி ரயில்வே பாலம் அருகிலான சாலை வழியாக அங்குள்ள விவசாய நிலப் பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்ற பசுக்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தன. இந்நிலையில், காற்று, மழையால் அப்பகுதி சாலையோர மின்கம்பத்தில் இருந்த மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. வாலாஜாபாத் பேரூராட்சி, மெக்ளின்புரம் பகுதியைச் சேர்ந்த மோகன், 48, மற்றும் ஆயர்பாடி தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன், 45, ஆகியோரது இரண்டு பசுக்கள் இந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்துஉயிரிழந்தன.
Next Story

