புகையிலை விற்ற 2 கடைகளுக்கு சீல்

X
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே கண்ணனாகம் சந்திப்பில் வேணுகோபால், வாமதேவன் ஆகியோர் பெட்டிக்கடை வைத்துள்ளனர். இந்த கடையில் வெற்றிலை பாக்குடன் சேர்த்து புகையிலை நெட்டு வைத்து விற்பனை செய்வது வழக்கம். இதை விற்பது தவறு என்று தாலுகா உணவு பாதுகாப்பு அதிகாரி தலைமையில் வந்த ஊழியர்கள் இரண்டு கடைகளுக்கும் சீல் வைத்தனர். வெற்றிலை பாக்குடன் புகையிலை நட்டு சேர்த்து தான் வயதானவர்கள் பயன்படுத்துவார்கள். குறிப்பாக மீன்பிடித் தொழிலுக்கு செல்வர்கள் புகையிலை நட்டுடன்தான் வெற்றிலை பாக்கு சேர்த்து பயன்படுத்துவார்கள். ஆகையால் கடையில் சீல் வைத்து தவறு என்று கொல்லங்கோடு வணிகர் சங்க தலைவர் கோபால் மற்றும் வணிகர்கள் உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் முறையிட்டனர். இதை அடுத்து கடைகளுக்கு வைத்த சீல் உணவு பாதுகாப்பு அதிகாரி அகற்றினார்.
Next Story

