கோவை: தொடர்ச்சியான குற்றம் - 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கோவை சாய்பாபா காலனி பகுதியில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய இரண்டு நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டது. வன்னிஷ் (அ) வன்னியராஜ் மற்றும் திவாகர் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின்படி நேற்று இருவருக்கும் குண்டர் தடுப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறையில் இருக்கும் அவர்களிடம் குண்டர் சட்டத்திற்கான நகல் வழங்கப்பட்டது.
Next Story

