கள்ளத்தனமாக மதுபானம் விற்ற 2 பேர் கைது

கள்ளத்தனமாக மதுபானம் விற்ற 2 பேர் கைது
X
திண்டுக்கல் அருகே கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த 2 பேர் கைது, 52 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தோமையார்புரம் பேருந்து நிறுத்தம் அருகே அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த வேலுச்சாமி(54) என்பவரையும் மாலப்பட்டி ரோடு, பசுமை நகர் பிரிவு அருகே மதுபானம் விற்பனை செய்த சிலம்பரசன்(35) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 52 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story