மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து 2 சக்கர வாகன பிரச்சார பயணம்*

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து 2 சக்கர வாகன பிரச்சார பயணம்*
X
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து 2 சக்கர வாகன பிரச்சார பயணத்தை மாநில குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன் கொடியைசைத்து தொடங்கி வைத்தார்.*
அரியலூர், ஜூன்.18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து அணைக்குடம் பஸ்நிறுத்தத்தில் 2சக்கர வாகன பிரச்சார பயணம்  தா.பழூர் ஒன்றிய செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது 2 சக்கர வாகன பிரச்சார பயணத்தை சிபிஎம் மாநில குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். கூட்டத்தில்  சிபி எம் கட்சி மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.பரமசிவம், டிஅம்பிகா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். பிரச்சார பயணத்திற்கு ஒன்று குழு உறுப்பினர்கள் வி.லெட்சுமி, எஸ்.உத்திராபதி டி.ராமமூர்த்தி, வி.குமார், ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.இதில்  தா .பழுரில் பொதுக்கழிப்பறை  வசதி செய்து கொடுக்க வேண்டும், அரசு மகளிர் கலைக் கல்லூரி அமைத்துக் கொடுக்க வேண்டும், ரேஷன் கடையில் கண் பார்வை வைத்து செய்யப்படும் முறையை நிறுத்தி, பழைய முறையை செயல்படுத்த வேண்டும், சுத்தமல்லி நீர்த்தேக்கத்திலிருந்து  தா .பழூர் வாய்க்காலை வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும், குருவாடி தலைப்பில் விவசாயிகளையும் விவசாய தொழிலாளர்களையும் பாதுகாத்திட வேண்டும், விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயிக்க வேண்டும், கும்பகோணம் முதல் விக்கிரமங்கலம் வரை நகர பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும், தா. பழூர் ஒன்றியத்தில் அரசு புறம்போக்கு, தரிசு புறம்போக்கு, கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும், 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி கூலி ரூபாய் 600 வழங்க வேண்டும், 100 நாள் வேலை கூலி பாக்கி வைத்துள்ளதை உடனே வழங்க வேண்டும், தா.பழூர் ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 சக்கர வாகன பிரச்சார பயணம் நடைபெற்றது..இதில் சிபிஎம் மாநில குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன்  அணைக்குடம் கிராம பொதுமக்களிடம்  மனுக்களை பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 2 சக்கர வாகன பிரச்சார பயணமானது  அணைக்குடத்தில் தொடங்கி சிலால் பஸ் நிறுத்தம் உள்ளிட்ட முக்கிய கிராமங்கள் வழியாக தா.பழூர் கடைவீதிக்கு வந்து முடிவடைந்தது. பிரச்சார பயணத்தில் சிபிஎம் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து  சிபிஎம் கட்சி மாநில குழு உறுப்பினர் ஐ வி நாகராஜன் பொதுமக்களிடமிருந்து குடிமனை, குடிமனை பட்டா, கோயில் இடங்களில் குடியிருப்போருக்கான குடிமனை பட்டா கோரும் மனுக்களை பெற்றுக் கொண்டு தா.பழூர் கடைவீதியில் பிரச்சாரப் பயணத்தினை நிறைவு செய்தார்.
Next Story