சேலத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

சேலத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் பள்ளப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் மற்றும் போலீசார் கவுரம்மா காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த முதியவர் உள்பட 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் அதே பகுதியை சேர்ந்த லட்சுமிநாராயணன் (வயது 72), மோகன் (47) என்பதும், அவர்கள் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.16 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story