மதிய உணவு சாப்பிட்ட பிளஸ் 2 மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தார்

X
திண்டுக்கல், பண்ணைக்காட்டு பிரிவில் உள்ள தனியார் பள்ளியில் கும்பரையூரை சேர்ந்த செல்வகுமார் மகள் காமாட்சி பிரியா(17) பிளஸ் 2 படித்து வந்தார் மதிய உணவு எடுத்து செல்லாத நிலையில் தந்தை செல்வகுமார் மதிய உணவை எடுத்து வந்து கொடுத்தார். மதிய உணவு சாப்பிட்ட மாணவி காமாட்சி பிரியா தலைவலி, மயக்கம் வருவதாக ஆசிரியரிடம் கூறிய நிலையில் மயங்கி விழுந்தார். பண்ணைக்காடு அரசு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் இறந்து விட்டதாக டாக்டர் கூறினார். தாண்டிக்குடி போலீசார் மாணவியின் உடலை உடற்கூறு பரிசோதனைக்கு திண்டுக்கல் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

