கிருஷ்ணகிரி: பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு உயர்கல்வி குறித்த சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரி: பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு உயர்கல்வி குறித்த சிறப்பு முகாம்
X
கிருஷ்ணகிரி:பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு உயர்கல்வி குறித்த சிறப்பு முகாம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பள்ளி கல்வித்துறை சார்பாக பொதுத்தேர்வு எழுதிய 12-ம் வகுப்பு மாணவர் கள் உயர்கல்வி சேர்க்கையில் ஏற்படும் குறைபாடுகளை களைந்து தீர்வு காணும் வகையில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இந்த முகாமை கலெக்டர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார். இதில் 12-ம் வகுப்பு முடித்த 283 மாணவர்கள் உள்பட பெற்றோர் மற் றும் ஆசிரியர்கள் 365 பேர் கலந்து கொண்டனர். இதில் 29 மாணவர் களுக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், ஒரு மாணவர் பல் தொழில் நுட்பக் கல்லூரியிலும், 2 மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலை யத்திலும் நேரடியாக சேர்க்கப்பட்டனர்.
Next Story