தேன்கனிக்கோட்டையில் மது கடத்திய 2 பேருக்கு காப்பு.

X
கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டை போலீசார் பன்சேஸ்புரம் பேருந்து நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனையிட்ட செய்தனர். அதில் கர்நாடகாவில் இருந்து 480 மதுபாட்டில்கள், 24 பீர்பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து காரில் வந்தவர் களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் பஞ்சேஸ்வரம் அருகேயுள்ள காந்திபுரம் பகுதியை சேர்ந்த ஜெய்சிம்மன் (36) முனிராஜ் (40) என்பதும் மதுபாட்டில்கள் கடத்தி வந்தததும் தெரியவந்தது. இதை அடுத்து அவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து. அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள், கார் பறிமுதல் செய்தனர்.
Next Story

