ஜெயங்கொண்டம் அருகே அரசு பள்ளி தலைமையாசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்து, தலைமறைவான விசிக நிர்வாகிகள் 2 பேர் போலீசார் கைது

X
அரியலூர், ஜூன்.26- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்முருகன். இவர் ஆண்டிமடம் விளந்தையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காட்டாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விசிக நிர்வாகியான பாக்கியராஜ் மற்றும் வேல்முருகன் ஆகிய இருவரும் மாணவர் சேர்க்கை தொடர்பாக, அரசு பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டனர். இதைத் தட்டிக் கேட்ட தலைமை ஆசிரியரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கவும் முயற்சி செய்தனர். பின்னர் இது குறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் தலைமை ஆசிரியர் தமிழ் முருகன் கடந்த 20ம் தேதி புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான பாக்யராஜ் மற்றும் வேல்முருகனை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த விசிக நிர்வாகியான பாக்கியராஜ் மற்றும் வேல்முருகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

