அரக்கோணம் அருகே கோவிலில் திருடிய 2 பேர் கைது

X
அரக்கோணத்தை அடுத்த புளியமங்கலம் கிராமத்தில் உள்ள நாகாத்தம்மன் கோவிலின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் அம்மன் கழுத்தில் இருந்த ஒரு பவுன் நகை, பித்தளை பூஜை பொருட்கள் மற்றும் பித்தளை அண்டா ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தார். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில், அரக்கோணம் சோமசுந்தரம் நகர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 45), குமார் (40) என்பதும், நாகாத்தம்மன் கோவிலில் திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, ஒரு பவுன் நகை மற்றும் பூஜை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Next Story

