ரேஷன் அரிசி பதுக்கிய மாவு மில் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது

ரேஷன் அரிசி பதுக்கிய மாவு மில் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் போலீசார் பூலாவரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு 21 மூட்டைகளில் 1,050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி பதுக்கிய ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த நடராஜ் (வயது 46) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அவர் கொண்டலாம்பட்டி, பூலாவரி பகுதியில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி அதை நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்ல பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து நடராஜை கைது செய்து 50 கிலோ ரேஷன் அரிசி மற்றும் மினி வேனை பறிமுதல் செய்தனர். அதே போன்று உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் அந்த பகுதியில் உள்ள ஒரு மாவு மில்லில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 18 மூட்டைகளில் 900 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து மில் உரிமையாளர் முருகேசன் (60) என்பவரை கைது செய்து மில்லில் பதுக்கி வைத்திருந்த 900 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் ரேஷன் அரிசி கடத்தியதாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
Next Story