ஓமலூர் அருகே கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது

ஓமலூர் அருகே கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த மேச்சேரி பிரிவு ரோடு ரெயில்வே கேட் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் கையில் பையுடன் நின்று இருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் சேலம் குட்டைக்காடு பகுதியை சேர்ந்த முகமத் முஜாஹித் (வயது 25), தொளசம்பட்டி அடுத்த ஓலைப்பட்டி பகுதியை சேர்ந்த நவீன்குமார் (20) என்பதும், கஞ்சா வைத்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ¾ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story