வீடு புகுந்து ஐ.டி., ஊழியரிடம் பணம், நகை பறித்த 2 பேர் கைது

X
காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம், முத்துமுருகன் நகரைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 35; ஐ.டி., ஊழியர். மேலும், சொந்தமாக டீக்கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். டீக்கடை தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, மூன்று மாதங்களுக்கு முன் டீக்கடையை மூடினார். இந்த நிலையில், இவரது டீக்கடையில் பணியாற்றிய வேலுார் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், 25, அவரது நண்பர் விக்னேஷ், 24, ஆகியோர், கடந்த 24ம் தேதி வரதராஜபுரத்தில் உள்ள மணிவண்ணன் வீட்டிற்கு சென்றனர். வீட்டில் தனியாக இருந்த மணிவண்ணனை, கத்தியை காட்டி மிரட்டி 'ஆன்லைன்' பணப்பரிமாற்ற செயலியான 'ஜி-பே' மூலம் ஒரு லட்சம் ரூபாயையும், 6 சவரன் நகையையும் பறித்து தப்பினர். இது குறித்து விசாரித்த மணிமங்கலம் போலீசார், 'ஜி-பே' எண்ணை 'டிராக்' செய்து, நேற்று தனுஷ் மற்றும் விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story

