புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

X
காங்கேயம் பஸ்நிலையம் பகுதியில் மது விற்ற நாகபட்டினம், நாச்சியர்குடியை சேர்ந்த செங்கதிர்(வயது 36) என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 20 மது பாட் டில் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் காங்கேயம்-சென்னிமலை ரோடு சாவடி பகுதியில் டீ கடையில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த ரங்கநாதன் (63) என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 500 கிராம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நால்ரோடு பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற, மூலக்கடை பகுதியைச் சேர்ந்த குமரேசன் (60) என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 50 பாக்கெட் பறி முதல் செய்யப்பட்டது. காங்கேயம் அய்யாவு செட்டியார் வீதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் (62) என்பவர் கேரளா லாட்டரி சீட் விற்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.
Next Story

