போதை மாத்திரை விற்பனை வழக்கில் கைதான 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

போதை மாத்திரை விற்பனை வழக்கில் கைதான 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
X
போலீஸ் கமிஷனர் உத்தரவு
சேலம் சூரமங்கலத்தை சேர்ந்தவர் மணிதர்மன். இவருடைய மகன் சந்தோஷ் (வயது 24). அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் தட்சிணாமூர்த்தி (23). இவர்கள் 2 பேரும் போதை மாத்திரைகள் விற்பனை செய்த வழக்கில் செவ்வாய்பேட்டை போலீசார் கைது செய்து, சேலம் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை சேலம் ஜெயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி, சந்தோஷ் ஆகிய 2 பேரிடம் போலீசார் வழங்கினர்.
Next Story