சேலம் கொண்டலாம்பட்டி அருகே மொபட் திருடிய 2 பேர் கைது

சேலம் கொண்டலாம்பட்டி அருகே மொபட் திருடிய 2 பேர் கைது
X
போலீசார் நடவடிக்கை
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முருகன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது30). இவர் சலூன் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். தனது மொபட்டில் செவ்வாய்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, மீண்டும் பின்னர் அவரது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் கொண்டலாம்பட்டியில் உள்ள ஒரு தியேட்டர் அருகே மொபட்டை நிறுத்திவிட்டு இயற்கை உபாதையை கழித்தார் அப்போது 2 வாலிபர்கள் கார்த்திகேயனின் மொபட்டை திருடி சென்றனர். இது குறித்து அவர் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய காட்சிகளை வைத்து ேதடி வந்தனர். அப்போது குருநாதன் கோவில் கரட்டூரை சேர்ந்த அஜித் (22), பிள்ளையார் கோவில் கரட்டூரை சேர்ந்த தீபக் (வயது 19) ஆகிய 2 பேர் மொபட்டை திருடியது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து மொபட்டை பறிமுதல் செய்தனர்.
Next Story