கஞ்சா கடத்திய கல்லூரி மாணவன் உள்பட 2 பேர் கைது.

கஞ்சா கடத்திய கல்லூரி மாணவன் உள்பட 2 பேர் கைது.
X
நல்லூர் அருகே கஞ்சா கடத்திய கல்லூரி மாணவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பரமத்திவேலூர், ஜூலை.10: பரமத்தி வேலூர் தாலுகா நல்லூர் அருகே மணியனூர் பஸ் நிறுத்தம் பகுதியில் நல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கங்காதரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி வேலூர். நோக்கி 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள். அதன் அடிப்படையில் அந்த 2 வாலிபர்களையும் நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும்  எலச்சிபாளையம் பகுதியை ராஜேந்திரன் மகன்கள் ஹரிஷ் (24). இவர் பெயிண்டர் தொழில் செய்கிறார். மற்றொரு மகன் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். என்பது தெரிய வந்தது. இவர்கள் தற்பொழுது ஈரோடு முனிசிபால் காலனியில் வசித்து வருகின்றனர். பின்னர் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது மோட்டார் சைக்கிள் டேங்க் கவருக்குள் 1 1/2 கிலோ கஞ்சா மறைத்து வைத்து இருப்பது கண்டுபிடிக்க ப்பட்டது. அதன் அடிப்படையில் 2 பேரையும் கைது செய்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் நாமக்கல்லில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story