சங்கரன்கோவில் அருகே ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்து 2 பெண்கள் படுகாயம்

சங்கரன்கோவில் அருகே ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்து 2 பெண்கள் படுகாயம்
X
ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்து 2 பெண்கள் படுகாயம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வாகைகுளம் பகுதியில் கழுகுமலை முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஆட்டோவில் மாவிலியூத்து கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி உள்ளிட்ட இரண்டு பெண்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சாலையோர பள்ளத்தில் ஆட்டோ எதிர்பாராவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு பெண்களும் படுகாயம் அடைந்தனர். இதற்குப் பின் அப்பகுதி பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அப்பெண்களை அனுமதித்தனர். இதுகுறித்து குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story