பயணியிடம் செல்போன் திருடிய 2 வடமாநில இளைஞர்கள் கைது.

X
ஆரணி அடுத்த மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர் (42) இவர் வெளியூர் செல்ல கடந்த (09.07.25)ம் தேதி ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்து பேருந்தில் பயணிகளுடன் ஏற முற்படும்போது பின்னே ஏறிய மர்ம நபர்கள் பன்னீர் சட்டை பாக்கெட்டில் இருந்து செல்போனை திருடி சென்றுள்ளனர். பின்னர் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போன் திருடு போனதை கண்ட பன்னீர் இதுகுறித்து நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருப்பதை போன்று சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 2 வடமாநில இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 1. ராமுபொத்ரஜி விசாகப்பட்டினம் ஆந்திர மாநிலம்... 2. ரபிதாஸ் பூர்பகோட், ஒரிசா ஆகிய இருவரும் பன்னீரிடம் செல்போன் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்
Next Story

