காவேரிப்பாக்கம் அருகே புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது

X
காவேரிப்பாக்கம் அடுத்த அவளூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் போலீசார் நேற்று ஓச்சேரி, மாமண்டூர் கரிவேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடு பட்டிருந்தனர். அப்போது பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரியை கரிவேடு சந்திப்பு மேக்லியன் கால்வாய் அருகே நிறுத்தி அதில் இருந்து ஒரு சாக்கு மூட்டையை இறக்கி உள்ளனர். இதை பார்த்த போலீ சார் சந்தேகமடைந்து அங்கு சென்று லாரி டிரைவரிடம் விசா ரணை செய்தனர். அதில் லாரியில் இருந்த சாக்கு மூட்டையில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூலிப், குட்கா உள்ளிட்ட பொருட்களை பெங்களூருவில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் லாரியில் இருந்தவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் நாட்டேரி பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 47), தேவராஜ் (33) என்பது தெரிய வந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story

