இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து 2 பேர் படுகாயம்

இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து 2 பேர் படுகாயம்
X
திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து 2 பேர் படுகாயம்
திண்டுக்கல் அருகே சாமியார்பட்டியை சேர்ந்த மணவாளன் மகன் பாக்கியராஜ்(30) சின்னாளப்பட்டி சேர்ந்த ராமலிங்கம் மகன் பாலமுருகன்(32) ஆகிய இருவரும் திண்டுக்கல்லில் இருந்து சின்னாளப்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற போது தோமையார்புரம் அருகே இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story