அரிசி, புகையிலை பொருட்கள் கடத்தல்:2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

அரிசி, புகையிலை பொருட்கள் கடத்தல்:2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் மாவட்டம் கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் லிங்கராஜ் (வயது 38). இவர் கடந்த மாதம் பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்கள் கடத்தி வந்த போது செவ்வாய்பேட்டை போலீசார் கைது செய்து, சேலம் ஜெயிலில் அடைத்தனர். ஜாரி கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (54). இவர் கடந்த மாதம் ரேஷன் அரிசி கடத்திய போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர்கள் 2 பேரும் அடிக்கடி அரிசி, புகையிலை பொருட்கள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபடுவதாகவும், இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் கேழ்கர் சுப்பிரமணிய பாலசந்தர் பரிந்துரை செய்தார். இதையடுத்து லிங்கராஜ், ஆறுமுகம் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை சேலம் ஜெயிலில் உள்ள லிங்கராஜ், ஆறுமுகம் ஆகியோரிடம் போலீசார் வழங்கினர்.
Next Story