வாணியம்பாடியில் 2 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை..

வாணியம்பாடியில் 2 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 2 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை.. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி.. கனமழையால் குளிர்ச்சியான காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி.. திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்தது இந்த நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து வாணியம்பாடி அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக கனமழை பெரிய தொடங்கியது இந்த மலையானது ஆலங்காயம், நிம்மியம்பட்டு, கொடையாஞ்சி, அம்பலூர், பெரியபேட்டை, நியூடவுன், செட்டியப்பனூர், ஜனதாபுரம், பெருமாள்பேட்டை, நேதாஜி நகர், கிரிசமுத்திரம், வளையாம்பட்டு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக இடைவில்லாமல் கனமழை பெய்து கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மழையின் காரணமாக நியூடவுன் பைபாஸ் சாலைகளில் மழை வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
Next Story