ஏழாவது சிறுபாசனக் கணக்கெடுப்பு மற்றும் 2-வது நீர்நிலை கணக்கெடுப்பு

ஏழாவது சிறுபாசனக் கணக்கெடுப்பு மற்றும் 2-வது நீர்நிலை கணக்கெடுப்பு
X
பொருளியில் மற்றும் புள்ளியியல் துறை சார்பில், ஏழாவது சிறுபாசனக் கணக்கெடுப்பு மற்றும் 2-வது நீர்நிலை கணக்கெடுப்பு தற்போது கிராம அளவில் கிராம நிர்வாக அலுவலர்களாலும் நகர்ப்புறங்களில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் களப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது
ஏழாவது சிறுபாசனக் கணக்கெடுப்பு மற்றும் 2-வது நீர்நிலைக் கணக்கெடுப்பு மத்திய அரசின் 100 சதவீத நிதி உதவியுடன் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் மத்திய அரசின் ஆளுமைக்குட்டபட்ட கூட்டாட்சி பிரதேசங்களிலும் (All States and UTs)  ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் இக்கணக்கெடுப்பு தற்போது கிராம அளவில் கிராம நிர்வாக அலுவலர்களாலும் நகர்ப்புறங்களில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் களப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.            இத்திட்டத்தின் சீரிய நோக்கம் சிறுபாசனப்பிரிவு சார்ந்த தெளிவான நம்பகத்தன்மையுடைய புள்ளி விவரத் தொகுப்பு உருவாக்கப்பட்டு, அவை நீர்வள ஆதாரங்களை மேம்படுத்த அடித்தளமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே ஆகும். இத்திட்டத்தின் முக்கிய செயல்பாடானது அனைத்து நிலத்தடி நீர் மற்றும் மேற்பரப்பு நீர்த் திட்டங்களை உள்ளடக்கிய (பெரும்பாலும் 2000 ஹெக்டேர் வரை -தனியார் உட்பட) சிறுபாசனத் திட்டங்களின் கணக்கெடுப்பு ஆகும்.              முதல் சிறுபாசனக் கணக்கெடுப்பு 1986-87ஆம் ஆண்டை மேற்கோளாகக் கொண்டு அகில இந்திய அளவில் நடத்தப்பட்டு அதன் தகவல் தொகுப்பு 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதுவரை ஆறு சிறுபாசனக் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆறாவது சிறுபாசனக் கணக்கெடுப்பு 2017-18ஆம் ஆண்டை மேற்கோளாகக் கொண்டு நடத்தப்பட்டு, சிறுபாசனக் கணக்கெடுப்பு நோக்கம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, நீர்நிலைக் கணக்கெடுப்பு சேர்த்து நடத்தப்பட்டு மே - 2023 ஆம் ஆண்டு தகவல் தொகுத்து வெளியிடப்பட்டது.            தற்போது 2023-24 ஆம் ஆண்டை மேற்கோளாகக் கொண்டு 7-வது சிறுபாசனக் கணக்கெடுப்பு மற்றும் 2-வது நீர்நிலை கணக்கெடுப்பு, முதல் பெரிய மற்றும் நடுத்தர நீர்பாசனத் திட்டங்கள்  கணக்கெடுப்பு மற்றும் முதல் நீருற்று கணக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது. மேலும் இவ்விவரங்கள் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தால் நிலத்தடி நீர் வளங்களை மதிப்பிட பயன்படுத்தப்படுவதுடன் நீர்வள அமைச்சகத்தில் உள்ள பலபிரிவுகளில் இக்கணக்கெடுப்பு விவரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.           தமிழ்நாடு மாநிலம் முழுவதும், விருதுநகர் மாவட்டத்தில் கிராமம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களால் இப்பணி காகிதங்களை பயன்படுத்தாமல் கைப்பேசி மூலமாக தேசிய தகவல் மையம்  செயலி மூலம் டிஜிட்டல் முறையில் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் குறிப்பாக விவசாயிகள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா அவர்கள் தெரிவித்துள்ளார்.
Next Story