சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணத்தினால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2 வது நாளாக தொடர்ந்து வனத்துறையினர் தடை

தடை
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் ஆன்மிக ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து செல்வது வழக்கம். வார இறுதி நாளை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடன் சில நாட்களாக மேகமலை, தூவனம், மணலாறு, அதேபோல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்லவும் குளிக்கவும் வனத்துறை நேற்று தடை விதித்திருந்தனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்றும் நீர்வரத்து குறையாததால் சுருளி அருவியில் இரண்டாவது நாளாக செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்
Next Story